ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறை – வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு
ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறை – வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்ப
ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் வெளிநாட்டவர்களுக்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பாக அமையும் என குறிப்பிடப்படுகின்றது.
ஜெர்மனி நாட்டில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில் தொழிற்கல்வியை மேற்கொள்கின்றவர்களில் 30 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த தொழிற் கல்வியை முற்றுப்பெறுவது இல்லை என்று புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
குறிப்பாக நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் கம் என்ற நகரத்தில் இவ்வாறு தொழிற்கல்வியை மேற்கொள்கின்றவர்களில் 35.4 சதவீதமானவர்கள் தமது தொழிற் கல்வியை முற்றாக நிறைவு செய்வது இல்லை என்றும், புள்ளி விபரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹைன்பேகர் பிரதேசத்தில் இவ்வாறு தொழிற்கல்வியை நிறைவு செய்யாதவர்களின் எண்ணிக்கை 31.7 சதவீதமாகவும் ரெக்லின்ஹவுஸில் 34.6 சதவீதமாகவும் காணப்படுவதாகதெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஒக்சா ரைசில் இவ்வாறு தொழிற் கல்வியை நிறைவு செய்யாதவர்களின் எண்ணிக்கையானது 23.4 ஆகவும், புள்ளி விபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எது எவ்வாறாக இருப்பினும் இவ்வாறு தொழிற் கல்வியை நிறைவு செய்கின்றவர்களில் ஆண்கள் மற்றும் பெண்களுடன் ஒப்பிடும் பொழுது ஆண்களே தொழிற் கல்வியை முற்றுப்பெறாமல் வெளியேறுவது என்பது அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிகளவில் வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் அவதானமாக செலுத்தியுள்ளது.
அதற்கமைய, ஜெர்மனியில் பணியாற்ற எதிர்பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக இது உள்ளதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.