பிரித்தானியாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல் – மில்லியன் கணக்கானோர் வாக்களிக்க தகுதி
பிரித்தானியாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.
மில்லியன் கணக்கானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பிரித்தானியாவில் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்களிப்பு தொடங்கும்.
இரவு 10 மணிக்கு வாக்களிப்பு நிறைவடையும். வாக்காளர்கள் 650 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர்.
அதிக இடங்களைப் பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். அந்தக் கட்சியின் தலைவர் பிரித்தானியாவில் பிரதமராகப் பொறுப்பேற்பார்.
தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புக் குறைவு எனப் பரவலாகக் கருதப்படுகிறது.
கடந்த 14 ஆண்டாக அக்கட்சியின் 5 பிரதமர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர். கேயர் ஸ்டாமர் தலைமையிலான தொழிற்கட்சி இம்முறை தேர்தலில் வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
(Visited 8 times, 1 visits today)