பிரித்தானியாவில் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் இளம் வயதினருக்கு காத்திருக்கும் ஆபத்து!
UK வயது வந்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வாரத்திற்கு ஒரு முறையாவது வைட்டமின் சப்ளிமண்டுக்களை (மாத்திரையை) பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அகலா மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் 04 இலட்சம் பேரை கொண்டு நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகளின்படி சாதாரண மாத்திரைகளை விட வைட்டமின் மாத்திரைகளை தினசரி எடுத்துக்கொள்பவர்கள் அகால மரணத்தை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
“நீண்ட ஆயுளை மேம்படுத்த மல்டிவைட்டமின் பயன்பாடு ஆதரிக்கப்படவில்லை” என அரசாங்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக, இயற்கையான பீட்டா கரோட்டின் புற்றுநோயைத் தடுக்க உதவும் அதே வேளையில், பீட்டா கரோட்டின் கொண்ட சப்ளிமெண்ட்ஸ் சில புற்றுநோய்கள் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் அதிகளவிலான இரும்பு உட்கொள்ளல் இருதய நோய், நீரிழிவு மற்றும் டிமென்ஷியா ஆகியவற்றின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேரிலாந்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் டாக்டர் எரிக்கா லோஃப்ட்ஃபீல்ட் மற்றும் அவரது குழுவினர் தினசரி மல்டிவைட்டமின் நுகர்வு இறப்பு விகிதங்களைக் குறைப்பதற்கான எந்த ஆதாரத்தையும் காணவில்லை.
மாறாக, ஜமா நெட்வொர்க்கில் வெளியிடப்பட்ட ஆய்வில், மல்டிவைட்டமின் பயன்படுத்துபவர்களிடையே ஆரம்பகால மரணம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 4% அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.