இந்தியாவில் சீரற்ற வானிலையால் 16 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த இரு வாரங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தின் காரணமாக குறைந்தது 03 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான அசாமில் இந்திய ராணுவமும் விமானப் படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அத்துடன் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பிரம்மபுத்திரா நதியில் உள்ள சிறிய தீவில் நான்கு நாட்களாக சிக்கித் தவித்த 13 மீனவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் எல்லையை ஒட்டிய அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், நிலச்சரிவு ஏற்பட்டு பல சாலைகள் அழிந்துள்ளன.
சாங்லாங் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பள்ளியிலிருந்து 70 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அங்குள்ள ராணுவ வீரர்கள் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல் சிக்கிம், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் பெய்த கனமழையால் சாலைகள் அடித்து செல்லப்பட்டு பாலங்கள் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.