செய்தி வாழ்வியல்

அதிகம் பால் குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

பாலில் எந்த பால் நம் உடலுக்கு நல்லது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

உலகம் முழுவதும் மக்கள் பலவிதமான பால்களை பயன்படுத்துகின்றனர் .அதில் ஆட்டுப்பால் ,மாட்டுப்பால், எருமை பால், ஒட்டகப் பால் ,கழுத பால் போன்றவற்றை பயன்படுத்திகின்றனர். அதில் முதலிடத்தில் பசும்பாலும் இரண்டாம் இடத்தில் எருமை பாலும் உள்ளது.

பொதுவாகவே பாலில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்து உள்ளது.

பசும்பால் Vs எருமைப்பால்;
பசும் பாலை விட எருமை பாலில் புரதச்சத்தும் வைட்டமின்களும் அதிகம் நிறைந்துள்ளது பாலும் கெட்டியாக இருக்கும் . பசும்பாலின் கலோரி 67 ஆக உள்ளது ஆனால் எருமை பாலின் கலோரி 117 ஆகும். அதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பசும்பால் எடுத்துக் கொள்ளலாம் .அதுவே உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் எருமைப்பால் எடுத்துக்கொள்ளலாம்.

ஆட்டுப்பால்;
ஆட்டுப்பாலை நம் இந்தியாவில் இரண்டு சதவீதம் மக்கள் தான் பயன்படுத்துகின்றனர் .பசும்பாலை ஒப்பிடுகையில் ஆட்டுப்பால் எளிதில் ஜீரணமாக கூடியது. அதாவது பசும்பால் இரண்டு மணி நேரத்தில் ஜீரணம் ஆகிறது என்றால் ஆட்டுப்பால் அரை மணி நேரத்திலேயே ஜீரணமாய் விடுகிறது. பசும்பாலில் உள்ள புரதம் பலருக்கும் அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால் ஆட்டுப்பால் எந்த அலர்ஜியையும் ஏற்படுத்துவதில்லை மேலும் லாக்டோஸ் அளவு குறைவாகத்தான் இருக்கும்.

ஒட்டகப் பால்;
ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்பை சத்தை விட ஒட்டக பாலில் குறைவுதான். ஆட்டுப்பாலை விட மிக எளிதில் ஜீரணம் ஆகிவிடும். இதிலும் லாக்டோஸ் குறைவாகத்தான் உள்ளது. பசும்பாலை விட விட்டமின் சி சத்து ஒட்டகப் பாலில் நான்கு மடங்கு அதிகம் உள்ளது.

மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்ட்ரோலாக வைத்துக் கொள்கிறது.மேலும் லாக்டோபரின், இமினோகுளோபின் போன்ற சத்துக்கள் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது ஆனால் இதன் விலை சற்று அதிகம்.

கழுதை பால்;
கழுதை பால் சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பயனுள்ளதாக உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிளியோபாட்ரா தன் அழகை பராமரிக்க கழுதை பாலில் தான் குளித்தார் என கூறப்படுகிறது. மேலும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் கழுதை பால் பயன்படுத்தப்படுகிறது.

இதில் லாக்டோஸ் அதிகமாக உள்ளது. மேலும் பசும்பாலை விட மூன்று மடங்கு கொழுப்பு சத்து குறைவு, அதுமட்டுமில்லாமல் தாய்ப்பாலை போல் சுவையுடன் இருக்கும் என கூறப்படுகிறது, இந்தப் பால் எந்தவித அலர்ஜியையும் ஏற்படுத்துவதில்லை ஆனால் இதன் விலை மிக மிக அதிகம்.

எனவே எளிதில் நமக்கு கிடைக்கக்கூடியதும் விலை குறைவாக இருப்பதால் மாட்டுப்பால் அதிலும் நாட்டு மாட்டு பால் சிறந்தது அடுத்ததாக எருமைப்பால் சிறந்ததாகும்.

(Visited 40 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!