ஜேர்மனியில் பொலிசாரை நோக்கி கத்தியுடன் பாய்ந்த நபர் சுட்டுக்கொலை!
 
																																		ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Lauf an der Pegnitz நகரில், பொலிசாரை நோக்கி கத்தியுடன் பாய்ந்த ஒருவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள்.
நேற்று மூன்று அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் கத்தியை ஏந்திய  நபர்   ஒருவர்
 திடீரென தாக்கியுள்ளார்.
பொலிசார் காரை விட்டு இறங்கவே, அவர் கத்தியுடன் பொலிசாரை நோக்கி ஓடிவந்ததாகவும், அவரை பொலிசாரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்கியவரை சுட்டுக் கொன்றது குறித்த விவரங்களை வழங்காமல், சம்பவத்தில் அதிகாரிகள் காயமடையவில்லை என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். கத்தியை ஏந்திய நபர் யார் என்பது குறித்தும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
(Visited 8 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
