பாரிய நெருக்கடியில் இலங்கையின் சுகாதாரத்துறை : கொத்தாக வெளியேறும் வைத்தியர்களால் சிக்கல்!
இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 400 நிபுணர்கள் வெளியேறியுள்ள நிலையில், சுகாதார துறை பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.
கிட்டத்தட்ட 5,000 இலங்கை வைத்தியர்கள் வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்குத் தகுதிபெறும் பரீட்சைகளில் வெற்றிகரமாக சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இலங்கை முழுவதிலும் உள்ள அரசாங்க சுகாதார நிறுவனங்களில் சுமார் 20,000 வைத்தியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில், கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் வெளியேறுவது ஒரு கடுமையான சவாலாக உள்ளது.
மேலும், PLAB தேர்வில் பங்கேற்ற 3,500 பரீட்சார்த்திகளில் 750 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். பரீட்சையில் சித்தியடைந்த 2100 பேரில் 550 பேர் இலங்கையர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
PLAB (தொழில்முறை மற்றும் மொழியியல் மதிப்பீட்டு வாரியம்) தேர்வு என்பது ஐக்கிய இராச்சியத்தில் மருத்துவம் செய்ய வெளிநாட்டு மருத்துவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டிய ஒரு சோதனை ஆகும்.
இந்த தேர்வை பெரும்பாலான இலங்கையர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இந்த முன்னேற்றங்கள் சுகாதார அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.