இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
190,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆறு மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 7.3% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் மே மாதத்தில் மாத்திரம் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.