சிங்கப்பூரில் வாழும் இளைஞர்களில் 10இல் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
சிங்கப்பூரில் வாழும் இளைஞர்களில் 10இல் ஒருவர் குறைந்தது ஒரு மனநோய்ப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக தேசிய ஆய்வு ஒன்றில் அவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் பின்னணியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
10 முதல் 18 வயதுடைய இளையர்களின் மன நலத்தையும் ஆரோக்கியத்தையும் புரிந்துகொள்வதற்காக ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 6 விழுக்காட்டினர் ஓராண்டுக் காலத்தில் மனநலக் கோளாற்றிலிருந்து முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரியவந்தது. மூன்றில் ஓர் இளையர் தனிமை, பதற்றம் போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்.
2020 முதல் 2022 வரை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அவ்வாறு கண்டறியப்பட்டது.
துருதுருவென இருப்பது, சீற்றத்துடன் காணப்படுவது, 6இல் ஓர் இளையருக்கு இது போன்ற அறிகுறிகளும் உள்ளன.
இவ்வாறு பாதிக்கப்படுவோருக்குத் தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மின்னிலக்கக் கருவிகள், அதிகமாக ஊடகங்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றால் மன நலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும் ஆய்வில் ஆராயப்பட்டது.
பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் பெற்றோருக்கு உதவ அரசாங்கப் பணிக்குழு ஒன்றின் முயற்சிகள் தொடர்கின்றன.
ஆபத்து அதிகமுள்ள இளையர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தொடக்கத்திலேயே நெறிப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக உள்துறைத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங் கூறினார்.