பிரான்ஸில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம்
பிரான்ஸில் Île-Saint-Denis தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றப்பட்டனர்.
நேற்று புதன்கிழமை காலை பொலிஸாரால் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
300 இல் இருந்து 500 வரையான அகதிகள் இங்கு தங்கியிருந்த நிலையில், நேற்று காலை இங்கு வந்த பொலிஸார் மற்றும் ஜொந்தாமினர் அகதிகளை பேருந்துகளில் ஏற்றி வெளியேற்றினர்.
குறித்த பகுதியானது 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயார்ப்படுத்தப்பட உள்ளது. அதையடுத்து நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்த அகதிகள் வெளியேற்றம் இடம்பெற்றது.
வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருடன் மனித உரிமைக்குழுவினர், அகதிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் வெளியேற்றத்தில் பங்கேற்றனர்.
(Visited 1 times, 1 visits today)