இலங்கை கிரிக்கெட் சபையைின் உறுப்புரிமையை இடைநிறுத்த ஐசிசி நடவடிக்கை

சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையின் உறுப்புரிமையை இடைநிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று வினவியதாகவும், அங்கத்துவத்தை தடை செய்ய வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட்டின் அங்கத்துவம் இடைநிறுத்தப்படும் எனவும், அவ்வாறான பட்சத்தில் எதிர்கால சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இலங்கை இழக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 22 times, 1 visits today)