கென்யா வரி உயர்வு போராட்டத்தில் ஈடுபட்ட பராக் ஒபாமாவின் சகோதரி
நைரோபியில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய எதிர்ப்பாளர்களில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரியான கென்ய செயற்பாட்டாளர் ஔமா ஒபாமாவும் ஒருவர் என அறியப்பட்டுள்ளது.
கென்யாவின் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது, குறைந்தது ஐந்து எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் மற்றும் பாராளுமன்ற கட்டிடத்தின் சில பகுதிகள் எரிக்கப்பட்டன.
ஆமா ஒபாமாவை ஒரு ஊடக நிருபர் ஒருபுறம் அழைத்துச் சென்று, அவர் ஏன் அங்கு வந்தார் என்று கேட்டார்.
“நான் இங்கே இருக்கிறேன் ஏனென்றால்,என்ன நடக்கிறது என்று பாருங்கள். இளம் கென்யா மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அவர்கள் கொடிகள் மற்றும் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இனி என்னால் பார்க்க முடியாது,” என்று அவள் இருமளுடன் தெரிவித்தார்.
முன்னதாக ஆமா ஒபாமா தனது ட்விட்டரில் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களை வெளியிட்டார்.