யாழில் இரண்டு அடி நீளத்தில் மாவிலை
யாழ்ப்பாணத்தில் மாவிலை ஒன்று வழமைக்கு மாறாக பெரியளவில் காணப்படுவதால் , அவற்றை அப்பகுதி மக்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்
சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் உள்ள மாமரம் ஒன்றில் மாவிலைகள் சாதாரண மாவிலையை விட மிக பெரியளவில் காணப்படுகிறது.
சாதாரண மாவிலைகள் சுமார் 30 சென்ரி மீட்டர் நீளமுடையதாக காணப்படும் நிலையில் குறித்த மாவிலை 60 சென்ரி மீற்றர் நீளும் , 20 சென்ரி மீற்றர் அகலமுடையதாக காணப்படுகிறது.
இவ்வாறு பெரியளவில் காணப்படும் மாவிலையை அப்பகுதி மக்கள் வியப்பாக பார்வையிட்டு செல்கின்றனர்.

(Visited 28 times, 1 visits today)





