கிரீஸிலில் வாணவெடிகளால் நேர்ந்த விபரீதம் -13 பேர் கைது
 
																																		கிரீஸில், வாணவெடிகளை வெடித்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாணவெடிகளை வெடித்ததால் காட்டுத்தீயை ஏற்படுத்தியது தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் ஹைட்ரா தீவிற்கு சொகுசு படகில் சென்ற ஒரு குழு, படகில் இருந்தபடி வாணவெடிகளை வெடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது வெளிப்பட்ட தீப்பொறிகள் பட்டு ஹைட்ரா தீவில் இருந்த ஒரே பைன் மரக் காடும் எரிந்து சாம்பலானது.
இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், சொகுசு படகு ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
(Visited 5 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
