சிங்கப்பூரில் கொரோனா தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
சிங்கப்பூரில் கரோனா தொற்று சற்று குறைந்த போதிலும் எண்ணிக்கை இன்னமும் அதிகமாகவே இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடுமையான பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி நிலையங்கள் செயல்படும் இடங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் நேரமும் கூட்டப்பட்டுள்ளது. இம்மாதம் குறைந்தது 30 நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் மக்களை நாடிச் செல்வதாகச் சுகாதார அமைச்சு கூறியது.
கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதம் உச்சத்தை அடைந்தது. அப்போதிலிருந்து எண்ணிக்கை குறைகிறது.
இம்மாதம் 9ஆம் திகதிக்கும் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு வாரத்தில் கொரோனா நோய்த்தொற்றால் சுமார் 12, 600 பேர் பாதிக்கப்பட்டனர். முந்திய வாரத்தில் அந்த எண்ணிக்கை 16, 800ஆக இருந்தது.
(Visited 2 times, 1 visits today)