இந்தியா செய்தி

கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் “கேரளா” என்று அழைக்கப்பட்டு வருகிறது. இனிமேல் கேரளா மாநிலம் “கேரளம்” என்று அழைக்க மத்திய அரசுக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஒருமனதாக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தொழில்நுட்ப காரணத்திற்கான தடைப்பட்டது. அதனால் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது.

“மொழி அடிப்படையில் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1ந்தேதி மாநிலங்கள் உருவாகின. அதனடிப்படையில் கேரளா மாநிலம் பிறந்த தினம் நவம்பர் 1-ந்தேதியாகும்.

தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகங்களுக்கு ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது.

ஆனால் அரசியல் சட்டத்தின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது.

இதனால் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3-ன் கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் எனத் திருத்த செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் அனைத்து மொழிகளிலும் கேரளம் என மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 37 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!