பிரித்தானியாவில் மூடப்படும் பிரதான பாதை : சாரதிகளின் கவனத்திற்கு!
பிரித்தானியாவில் கார்ன்வாலில் A30 இல் £330 மில்லியன் மதிப்பிலான இரட்டைப் பாதை திறக்கப்பட்டது.
சாலை போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டதை தேசிய நெடுஞ்சாலைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கோடைகால சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்திற்கு முன்பாக இரட்டைப் பாதையை திறக்க சாலை அமைப்பினர் திட்டமிட்டிருந்த நிலையில், பாதை திறக்கப்பட்டுள்ளது.
இதனால் தாமதங்கள், போக்குவரத்து நெரிசல்கள் வெகுவாக குறையும் என நம்பப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த பாதை திறக்கப்பட்டாலும், மேலும் சில பாதைகள் மூடப்பவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அறிவித்துள்ளது.
ஜூன் 24 முதல் ஜூலை 12 வரை சிவர்டன் சந்திப்பிலிருந்து சர்வீசஸ் ரவுண்டானா வரையிலான B3277 இணைப்புச் சாலையை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





