பிரித்தானியாவில் முதல்நிலை பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்
ஜெனீவாவில் உள்ள சுவிஸ் வீட்டில் வேலை செய்ய இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ஊழியர்களை சுரண்டியதற்காக இங்கிலாந்தின் பணக்கார குடும்பங்களில் ஒன்றான நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிரகாஷ் மற்றும் கமல் ஹிந்துஜா மற்றும் அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோர் தொழிலாளர் சுரண்டல் மற்றும் சட்டவிரோத வேலைக்காக சுவிஸ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு 4 முதல் 4 1/2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அவர்கள் மீது மனித கடத்தல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது, ஆனால் அவர்கள் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அவர்களது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமல் ஹிந்துஜா, தனது மாளிகையில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து மூன்று பேரை அழைத்து வந்துள்ளார்.
இவர்கள் நாளொன்றுக்கு சுமார் 18 மணித்தியாலங்கள் பணியமர்த்தப்பட்டதாகவும் ஒரு மணித்தியாலத்திற்கு 8 டொலர்கள் மாத்திரமே வழங்கப்படுவதாகவும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
எனினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் நாய்களுக்காக அதை விட அதிகமாக செலவு செய்துள்ளதாக மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அவர்களது வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் குடுமபத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இந்துஜா குடும்ப உறுப்பினர்களின் சொத்து சுமார் 37 பில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்துஜா குடும்பம் எரிபொருள், எரிவாயு மற்றும் வங்கி போன்ற துறைகளில் வணிகங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.