அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு 7000 ஆண் நண்பர்கள்! அவரே வெளியிட்டுள்ள செய்தி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பெண் ஒருவருக்கு 7000 ஆண் நண்பர்கள் இருப்பதாக அதிர்ச்சி கலந்த விஷயத்தை சொல்லியுள்ளார்.
இன்று திருமணம் என்ற உறவை விட டேட்டிங், சீட்டிங், காதல் என சர்வ சாதாரணமாகிவிட்டது. அத்துடன் தற்போது லிவிங் டூ கெதர் உறவுகளும் அதிகரித்து வருகின்றன. இதில் பல பெண்களுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் சில பெண்களுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்க மாட்டார்கள். அதாவது ஒன்றுக்கே வழியில்லாமல் இருப்பார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் பெண் ஒருவர் தனக்கு 7000 ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என சொல்வதை கேட்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் நலா ரே (25). இவருக்கு ஆன்லைனில் 7 ஆயிரம் ஆண் நண்பர்கள் இருக்கிறார்களாம். அவர்களுடனான தனது உறவு நிஜ வாழ்க்கையில் டேட்டிங் செய்வதை விட சிறந்தது என நலா ரே சொல்லியுள்ளார். இவர் நாள்தோறும் அவர்களுக்கு மெசேஜ் செய்வாராம். காலையில் எழுந்ததும் மகிழ்ச்சியான விஷயங்களை அந்த 7000 நண்பரக்ளுக்கும் பகிர்ந்துவிடுவாராம். அவர்களில் சிலர் பதில் சொல்வார்கள். அவர்களுடன் நான் உரையாடும் போது அந்த நாள் சிறப்பானதாக இருக்கிறது என்கிறார் நலா ரே.
இப்போது இப்படி மகிழ்ச்சி ததும்ப ஆன்லைனில் மெசேஜ் செய்யும் நலா, பல மாதங்கள் ஆஃப்லைனில் இருந்தார். அவருக்கு ஏதோ சோக சம்பவம் நடந்ததால் அவர் யாருடனும் பேசாமல் இருந்தாராம். நலா ரே கூறுகையில், மோசமான உறவின் வலியைப் போக்க புதிய நண்பர்களைத் தேட ஆரம்பித்தேன். நண்பர்கள் இல்லாமல் வாழ்வது கடினம் என தோன்றியது. என்னுடைய வாழ்க்கையை நண்பர்கள் ஜாலியாக மாற்றுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
தனது அழகை ரசிக்கும் நண்பர்களுடன் நலா டேட்டிங் செய்கிறாராம். 7000த்தை தாண்டி நிறைய ஆண் நண்பர்கள் நலாவுக்கு இருந்தனராம். ஆனால் நலா மிகவும் பொசசிவ்வாக இருந்ததால் சிலர் நலாவை விட்டு பிரிந்துவிட்டனராம். தன்னிடம் இருக்கும் பணத்தையும் அழகையும் பார்க்காமல் தன்னை நன்றாக புரிந்து கொள்ளும் வாழ்க்கைத் துணையை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாராம்.
இது போல் ஒரு வாழ்க்கைத் துணை கிடைப்பது கடினம் என்கிறார். மேலும் தான் அதிக அளவு பணம் சம்பாதிப்பதால் அதன் மேல் ஆசைப்பட்டு நிறைய பேர் திருமணத்திற்கு அணுகுகிறார்கள் என நலா ரே கூறுகிறார். இவர் மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா ரூ 2.45 கோடியாம்.