நியூசிலாந்தில் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லாத காதலன் – காதலியின் விபரீத செயல்
நியூசிலாந்தில் காதலன் தம்மை விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லவில்லை என காதலி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
எனினும் நீதிமன்றம் வழக்கை நிராகரித்துள்ளது. CL என்று அழைக்கப்பட்ட பெண் நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். அங்கு அவர் ஒரு கச்சேரிக்குச் செல்லவிருந்தார்.
விமான நிலையத்தில் தம்மை விடும்படி அவர் காதலனைக் கேட்டுக்கொண்டார். காதலன் அதனை மறுத்துவிட்டார். இதனால் CL விமான நிலையத்துக்கு நேரத்துக்குச் செல்ல முடியாமல் பயணம் தாமதமடைந்தது.
காதலனின் செயலால் தமக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக அவர் நடுவர் வழக்குத் தொடுத்தார்.
காதலன் விமான நிலையத்துக்குப் பெண்ணை அழைத்துச் செல்லவேண்டும் என்று ஒப்பந்தம் ஏதும் செய்துகொள்ளப்பட்டதா? செலவுகளை ஏற்றுக்கொள்வதாகக் காதலன் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டாரா? என்று நடுவர் மன்றம் கேள்வி எழுப்பியது.
அப்படியே ஒப்பந்தம் இருந்தாலும் அது செல்லுபடியாவதற்கு CLக்கும் காதலுனுக்கும் இடையே சட்டபூர்வ உறவு இருப்பது அவசியம் எனவும் இருவரும் காதலர்கள் என்ற நிலையில் வழக்கை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் கூறி நீதிமன்றம் வழக்கை நிராகரித்துள்ளது.