இலங்கை தேசிய அடையாள அட்டை தொடர்பில் ஆட்கள் பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டையை (NIC) பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தங்களது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
இந்த வயதினருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாததால் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், அவர்கள் இப்போது தங்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க இந்த மாத இறுதி வரை அவகாசம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு கால அவகாசம் ஜூன் 30 வரை காலக்கெடுவை நீட்டிகப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்தார்.