சீனாவை உலுக்கிய வெள்ளம் – 47 பேர் உயிரிழப்பு

சீனாவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரும்பாலான மரணங்கள் Guangdong மாநிலத்தின் Meizhou நகரில் ஏற்பட்டுள்ளன. அங்கு பெய்த அடைமழையால் வரலாறு காணாத வெள்ளத்துடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன.
ஆயிரக்கணக்கான வீடுகளும் வீதிகளும் சேதமடைந்துள்ளன. தொலைத்தொடர்பு, மின்சாரக் கட்டமைப்புகள் தடைபட்டன.
பேரிடர் மிக மோசமாக இருப்பதால் சிக்கியிருப்போரைத் தேடி மீட்பதில் அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்குவதாக CCTV செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கொட்டும் மழையால் 55,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேத மதிப்பு கிட்டத்தட்ட 650 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது..
வெள்ளம் இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரயிறுதியில் புயல்காற்று வீசலாம் என்றும் சீனாவின் தேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.