உலகின் இளைய பேராசிரியர் – 12 வயது சிறுவன்
2012 இல் பிறந்து பெற்றோர் மற்றும் சகோதரனுடன் நியூயோர்க்கில் வசித்து வரும் 12 வயதான சுபோர்னோ பாரி, நியூயோர்க் – லாங் ஐலேண்டில் உள்ள மால்வெர்ன் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற இளைய மாணவராக மாற உள்ளார்.
சுபோர்னோ பாரி தனது அடுத்த கட்ட கல்வி நடவடிக்கைகளை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் (NYU) தொடங்குவதற்கு முன் ஜூன் 26 அன்று தனது பட்டத்தை பெற உள்ளார்.
இந்தியாவில் இரண்டு புத்தகங்களை எழுதிய சுபோர்னோ பாரி, இந்த சாதனை தனக்கு மிகவும் “உற்சாகமானது” என தெரிவித்தார்.
2018ம் ஆண்டில், சோபோர்னோவுக்கு ஆறு வயதாக இருந்தபோது, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவரை ஒரு விஞ்ஞானியாக அங்கீகரித்தது.
அவர் 11 வயதில் 1500 SAT மதிப்பெண்ணுடன் உலக சாதனை படைத்ததன் மூலம் உலக மக்களின் கவனத்தைப் பெற்றார்.
“உலகின் இளைய பேராசிரியர்” என்று அழைக்கப்பட்ட அவர், மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் விருந்தினர் பேராசிரியராக விரிவுரை செய்ய அழைக்கப்பட்டார்.
கணிதம் மற்றும் இயற்பியல் மீதான அவரது ஆர்வம் இப்போது அவருக்கு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முழு உதவித்தொகையைப் பெற உதவியது.
அங்கு அவர் பேராசிரியராக வேண்டும் என்ற தனது கனவைத் தொடரவும், மற்றவர்களுக்கு “கணிதம் மற்றும் அறிவியலைப் கற்பிக்க” உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
பாரியின் கல்வித் திறன்கள் அவரை 4ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்புக்கும் பின்னர் 9ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புக்கும் செல்ல அனுமதித்தது, இது அவருக்கு விரைவாகப் பள்ளியை முடிக்க உதவியது.