பொசன் போயா தினத்தன்று பேய் வீடுகளுக்கு தடை?
பொசன் போயா தினத்தன்று வினோதமான பேய் வீடுகளை காட்சிப்படுத்துவதை தடை செய்யுமாறு அஸ்கிரி விகாரையின் விகாராதிபதி சங்கநாயக மிகெட்டுவத்த சுமித்த நஹிமியா பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் மற்றும் புத்தளம் மாவட்ட பிரதம பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் சில ஆலயங்களும் அமைப்புகளும் பொசன் போயாவை அடிப்படையாக கொண்டு பேய் வீடுகள் போன்ற அபத்தமான நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வாறான அபத்தமான செயல்களை செய்ய வேண்டாம் எனவும் பீடாதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், பிள்ளைகளுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாக பீடாதிபதிகள் கூறுகின்றனர்.
பொஸோன் போயா என்பது பேய் வீடுகளைக் காட்டும் போயா என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு இருக்கலாம் எனவும், அதனால் பேய் வீடுகள் காட்டுவதை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.