சிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!
சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டிருந்த தமிழருக்கு மரண தண்டனைய நிறைவேற்றியுள்ளது.
தங்கராஜூ சுப்பையா என்ற தமிழர் தூக்கிலிடப்பட்டுள்ளார்
இன்று அதிகாலை அவர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார் என அவரது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கராஜாமீது பலவீனமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது சட்டசெயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிங்கப்பூர் அதிகாரிகள் இவர் கஞ்சாவை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டியிருந்தனர்.





