அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்த குடியுரிமை ; அதிபர் ஜோ பைடன்
உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான அகதிகள் அந்த நாட்டவர்களை மணந்திருந்தால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் திட்டத்தை அதிபர் ஜோ பைடன் வகுத்துள்ளார்.இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை மனதில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக கருதப்படுகிறது.
இது குறித்து வெள்ளை மாளிகை புதன் கிழமூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது, உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பவர்கள், அமெரிக்கர்களின் கணவர் அல்லது மனைவியாக இருந்தால் அவர்கள்நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் இன்னும் சில மாதங்களில் அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம் அவர்கள் பிற்காலத்தில் நாட்டின் முழு குடியிருமையைப் பெற முடியும்.
அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்காவில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் . அவர்கள் அமெரிக்கர்களை மணந்து எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். ஆனால் திங்கள்கிமைக்கு(ஜூன்17) பிறகு அமெரிக்கர்களை மணந்த யாரும் இதற்காக விண்ணப்பிக்க முடியாது.
அந்த வகையில் ஜூன் 17ம் திதகதிக்கு முன்னர் எப்போதும் வேண்டுமானாலும் அமெரிக்கர் ஒருவரை மணந்து 10 ஆண்டுகளாக நாட்டில் தங்கியிருக்கும் எந்தவொரு அகதியும் குடியிரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.
அந்த விண்ணப்பம் ஏற்படாமல் 3 ஆண்டுகளில் அவர்கள் நிரந்தர குடியுரிமை அட்டைக்கா(கிரீன் கார்டு)விண்ணப்பிக்கலா. இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு தற்காலிக பணி உரிமமும் அமெரிக்காவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதிலிருந்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தலின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக அகதிகள் விவகாரமும் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறும் சூழலில், அகமிகள் வரத்தை கட்டுப்படுத்த பைடன் எடுத்து வரும் அண்மைக்கால நடவடிக்கைகள் விமர்சனத்திக்குள்ளாகி வருகின்றன.அந்த நடவடிக்கைகளுக்கு அவரது சொந்த கட்சியிலிருந்தே எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளனர.
முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்பை போலவே பைடனும் இந்த விவகாரத்தில் மிகம் கடுமையான நிலைப்பாட்டை கையாள்வதாக குற்றஞ்சாட்டப்பட்உள்ளது.
இந்த நிலையில், அகதிகள் விவகாரத்தில் தனத் மிதவாத போக்கு வெளிப்படுத்தும் விதமாக, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் 5 வட்சம் பேருக்கு கடியுரிமை வழங்க வகை செய்யும் திட்டத்தை பைடன் வகுத்துள்ளதாக கருதப்படுகிறது.