இலங்கையில் தபால் தலை (Stamp) விலை அதிகரிப்பு!

இலங்கையில் தபால்தலை ஒன்றின் குறைந்தபட்ச விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.
இதனை அமுல்படுத்த கருவூலத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக அவர் கூறினார்.
2022 வரை 15 ரூபாயாக இருந்த முத்திரையின் குறைந்தபட்ச விலை தற்போது 50 ரூபாயாக உள்ளது.
தபால் திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்து வருவதனால் இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)