செய்தி

iPhone பயனாளர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்

உங்களுடைய போனை நீங்கள் பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்துவதாக இருக்கட்டும் அல்லது உங்கள் குழந்தைகளின் சாதனத்தில் ஒரு சில கட்டுப்பாடுகளை அமைப்பது, குறிப்பிட்ட சில வெப்சைட்டுகளை பிளாக் செய்வது போன்ற எல்லா விஷயங்களை செய்வதற்கும் ஐபோன் பயனுள்ள கருவியாக திகழ்கிறது.

தொழில்நுட்பத்தில் நம்ப முடியாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனால் நமக்கு நேரம் மிச்சமாவது, சௌகரியம் போன்ற இன்னும் எக்கச்சக்கமான பலன்கள் கிடைக்கின்றன.

எனினும் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக ஒரு சில பின்னடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக அளவுக்கு அதிகமாக போனை பயன்படுத்துவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதேபோல நமது குழந்தைகளிடம் போனை கொடுக்கும்போது, அவர்கள் தவறுதலாக ஒரு சில வெப்சைட்டுகளுக்குள் நுழைந்து விடுகிறார்கள். இதனால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பின்னடைவுகள் இருந்தாலும், இதனை தடுப்பதற்கும் அதே தொழில்நுட்பம் நமக்கு ஒரு சில வழிகளை பரிந்துரை செய்கிறது. அதனை எப்படி செய்வது என்பதை படிப்படியாக இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்கிரீன் நேரத்தை அமைப்பது:

செட்டிங்ஸ் (Settings) ஆப்ஷனை திறக்கவும்:

உங்களுடைய ஐபோனில் உள்ள செட்டிங்ஸ் அப்ளிகேஷனை முதலில் திறந்து கொள்ளுங்கள். இது சாம்பல் நிற ஐகான் மூலமாக அடையாளம் காணப்படுகிறது.

ஸ்கிரீன் டைம் (Screen Time) என்பதை டேப் செய்யவும்:

கீழே ஸ்க்ரோல் செய்து ஸ்கிரீன் டைம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

கன்டென்ட் & பிரைவசி ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் (Content & Privacy Restrictions) என்பதை டேப் செய்யவும்:

ஒருவேளை இதற்கு முன்பு நீங்கள் ஸ்கிரீன் டைமிற்கு பாஸ் கோடு என்டர் செய்திருந்தால், அதனை நீங்கள் இப்போது என்டர் செய்ய வேண்டி இருக்கும்.

இப்போது கன்டென்ட் பிரைவசி ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் ஆப்ஷன் டிசேபிள் ஆகி இருந்தால் அதனை ஸ்விட்ச் ஆன் செய்யவும்.

கன்டென்ட் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் (Content Restrictions) என்பதை கிளிக் செய்யவும்: அடுத்தபடியாக கன்டென்ட் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் என்ற ஆப்ஷனுக்கு செல்லுங்கள்.

வெப் கன்டென்ட் (Web Content) என்பதை தேர்வு செய்யவும்:

இங்கு உங்களுக்கு தேர்வு செய்வதற்கு மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

– Unrestricted Access: Allows all websites

– Limit Adult Websites: Automatically restricts access to adult websites, with options to always allow or never allow specific sites.

– Allowed Websites: Only allows access to pre-approved websites, with the ability to add extra sites as needed.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி