ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 120 பேர் காயம் – நால்வர் பலி

ஈரானின் கஷ்மர் நகரில் 4.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர்களில் 120 பேர் காயமடைந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானைப் பாதித்த இந்த நிலநடுக்கம் துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
(Visited 24 times, 1 visits today)