தைவானுக்கு இராணுவ தளவாடங்களை வழங்க அமெரிக்கா – சீனா எச்சரிக்கை

சீனாவின் அழுத்தத்திற்கு மத்தியில் தைவானுக்கு இராணுவ தளவாடங்களை வழங்க அமெரிக்கா தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எந்த நேரத்திலும் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையின் பின்னணியில் அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தைவானின் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ, தைவான் அமெரிக்காவிடம் வாங்கிய 1,700 TOW 2B டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 100 ஏவுகணை அமைப்புகளை இரண்டு வருட தாமதத்திற்குப் பிறகு இந்த ஆண்டு இறுதிக்குள் பெறும் என்று அறிவித்தார்.
2018-2025 நிதியாண்டில் தைவான் பாதுகாப்புச் செலவினங்களுக்காக 364 மில்லியன் அமெரிக்க டொர்களை ஒதுக்கும் என்று ஊடகங்கள் தெரிவித்தன, மேலும் தைவான் 2022 இல் தொடர்புடைய இராணுவ உபகரணங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கிறது.
ஆனால் தடைகள் காரணமாக ஒப்பந்தம் தாமதமானது, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க ஆயுதங்களைப் பெற தைவான் எதிர்பார்க்கிறது.