குடும்ப அரசியலை முன்னெடுக்கிறாரா புட்டின் : புதிய நியமனத்தால் வந்த சர்ச்சை!
விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு எதிரான போருக்கு மத்தியில் தனது சொந்த உறவினரை துணை பாதுகாப்பு மந்திரியாக நியமித்துள்ளார். இது அவர் பரம்பரை அரசியலை முன்னெடுக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கடந்த மாதம் செர்ஜி ஷோய்கு பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, 52 வயதான அன்னா சிவிலேவாவை முக்கிய பதவிக்கு நியமித்தார். அவர் புட்டினுக்கு மிகவும் நெருக்கமான உறவினர்.
ஆனால் இது மாநில ஊடக அறிக்கைகளில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இவரது கணவர் செர்ஜி சிவிலெவ், முன்பு நிலக்கரி பிராந்தியமான கெமரோவோவில் பிராந்திய ஆளுநராக இருந்தவர். தற்போது எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புடின் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் நண்பர்களின் எச்சங்களை அகற்றியதால், பல துணை பாதுகாப்பு அமைச்சர்களில் ஒருவராக சிவிலேவா நியமிக்கப்பட்டார்.
கூட்டணியின் உறுதியை சோதிக்க போர்க்களத்தில் சிறிய அளவிலான தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி நேட்டோவை “பிளாக்மெயில்” செய்ய புட்டின் திட்டம் வகுக்கலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து இந்த தகவல்கள் கசிந்துள்ளன.