T20 WC – சூப்பர் 8 சுற்றுக்கான அட்டவணை வெளியீடு
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
லீக் சுற்று முடிவுகளிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தன.
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான விறுவிறுப்பு எகிற துவங்கியுள்ளது. லீக் சுற்றின் முடிவில், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
லீக் சுற்று போட்டிகளை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் முதல் போட்டி ஜூன் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஜூன் 20 காலை இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்
ஜூன் 20 இரவு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா
ஜூன் 21 காலை ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம்
ஜூன் 21 இரவு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா
ஜூன் 22 காலை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்
ஜூன் 22 இரவு இந்தியா மற்றும் வங்காளதேசம்
ஜூன் 23 காலை ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா
ஜூன் 23 இரவு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
ஜூன் 24 காலை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா
ஜூன் 24 இரவு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா
ஜூன் 25 காலை ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம்
சூப்பர் 8 சுற்று முடிவில் அரையிறுதி சுற்றுக்கு நான்கு அணிகள் முன்னேறும். அரையிறுதி சுற்றின் இரண்டு போட்டிகளும் ஜூன் 27 ஆம் தேதியே நடைபெறுகிறது. முதல் போட்டி காலையிலும், இரண்டாவது போட்டி இரவிலும் நடைபெறுகிறது.
அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகள் ஜூன் 29 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாட உள்ளன.