இலங்கையில் பயங்கரம் : பாடசாலை மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன்

கண்டி, அம்பிட்டியவில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவன் கத்தியால் குத்தியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பிட்டிய, உடுவெல பிரதேசத்தில் வசிப்பவர்கள் இருவரும் பாடசாலையில் தரம் பதினொன்றில் கல்வி கற்று வருகின்றனர்.
சந்தேக நபர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 22 times, 1 visits today)