48 மணி நேரத்தில் மனிதர்களைக் கொல்லும் திறன் கொண்ட பாக்டீரியாக்கள்; ஜப்பானில் வேகமாக பரவி வருகிறது
சதை உண்ணும் பாக்டீரியாவால் 48 மணி நேரத்தில் மனிதனை கொல்லும் நோய் ஜப்பானில் பரவி வருகிறது. ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2 வரை, 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் 941 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1999 ஆம் ஆண்டு முதல் தொற்று நோய்களை ஆய்வு செய்து வரும் தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனம், நோய் பாதிப்பு குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது.
வீக்கம் மற்றும் தொண்டை புண் ஆகியவை நோயின் முக்கிய அறிகுறிகளாகும். சில சந்தர்ப்பங்களில், தொற்று தீவிரமடையும். அத்தகையவர்களுக்கு கைகால் வலி, வீக்கம், காய்ச்சல், உயர் இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இறுதியில், கடுமையான உறுப்பு செயலிழப்பு ஏற்படலாம் மற்றும் நோயாளி இறக்கலாம்.
டோக்கியோ மகளிர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கெல் கிகுச்சி, இந்த நோயினால் ஏற்பட்ட பெரும்பாலான இறப்புகள் 48 மணி நேரத்திற்குள் நிகழ்ந்ததாகக் கூறினார்.