சிங்கப்பூரின் கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையோரப் பகுதி முழுவதும் எண்ணெய் கசிவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நெதர்லாந்தின் கொடியுடன் கூடிய வோக்ஸ் மாக்சிமா என்ற அகழ்வாராய்ச்சி கப்பலானது, சிங்கப்பூரின் எரிபொருள் விநியோகக் கப்பலான மரைன் ஹானர் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த எண்ணெய் கசிவானது பிரபல ரிசார்ட் தீவுயான சென்டோசா உட்பட, பல இடங்களுக்க பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொது பூங்கா மற்றும் இயற்கை காப்பகத்தில் உள்ள கடற்கரையின் ஒரு பகுதி சுத்தம் செய்யும் முயற்சிகளை எளிதாக்கும் வகையில் மூடப்பட்டுள்ளது.
சென்டோசா கடற்கரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் ஆனால் கடல் நடவடிக்கைகள் மற்றும் நீச்சல் விளையாட்டுக்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)