பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவுக்கு கிடைத்த இடம்
பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையின்படி, பெண்கள் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் ஐரோப்பிய நாடுகள் முன்னேற்றமடைந்துள்ளது.
மக்கள் தொகை, பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.
இந்த தரவரிசை 177 நாடுகளில் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு அளவுகோல்களின்படி செய்யப்பட்டது.
சுவிட்சர்லாந்து, சுவீடன், பின்லாந்து மற்றும் லக்சம்பர்க் உட்பட பல ஸ்காண்டிநேவிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் தரவரிசையில் முதலிடத்தை எட்டியுள்ளன.
கனடா 17வது இடத்திலும், பிரித்தானியா 26வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து அணி தரவரிசையில் 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா 11வது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான், ஏமன், மத்திய ஆப்ரிக்க நாடுகள் மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள், ராணுவ மோதல்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தரவரிசையில் இந்தியா 128வது இடத்திலும், பெண்கள் வாழக்கூடிய நாடுகளில் இலங்கை 60வது இடத்திலும் உள்ளது.