T20 WC – மழையால் இந்தியா மற்றும் கனடா போட்டி ரத்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்தியா, தனது 4வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவை எதிர்கொள்ள இருந்தது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடைபெற இருந்தது.
மழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பசை அதிகம் இருந்ததால். இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தியா-கனடா இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. கனடா 3 புள்ளிகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளது.
(Visited 14 times, 1 visits today)