ரஷ்யாவிற்கு விஜயம் செய்யும் இலங்கைப் பிரதிநிதிகள்!
ஜூன் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இராணுவ நோக்கங்களுக்காக ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத்தினரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையில் உயர்மட்ட குழுவொன்று ரஷ்யாவிற்கு செல்லவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov உடனான கலந்துரையாடலில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினரின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் ரஷ்ய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
தற்போது மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.