ஐரோப்பா

ரஷ்ய அதிகாரியின் காரில் வெடிகுண்டு பொருத்திய மர்ம நபர்கள்!

ரோஸ்டோவ் பிராந்தியத்தில் ரஷ்ய இராணுவ அதிகாரியின் வாகனத்தின் அடியில் வைக்கப்பட்ட கார் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

மில்லெரோவோ நகரில் நேற்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

“இராணுவப் பிரிவின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் வாடிம் எஸ். தனது வால்வோவை ஓட்டிச் சென்றபோது திடீரென கார் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

நிலைமையை சுதாகரித்துக்கொண்ட குறித்த அதிகாரி காரில் இருந்து குதித்து தப்பியுள்ளார்.

முதலில் எரிவாயு பாகங்கள் செயலிழப்பால் வெடிவிபத்து நிகழந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் காரைச் சுற்றி 4 மிமீ விட்டம் கொண்ட உலோக பந்துகளும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே எதிரிகள் இதனை திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!