இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இஞ்சி கடத்தி வர முயற்சி
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வருவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான 2,400 கிலோ இஞ்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இராமநாதன்புரம் பொலிஸாரால் நேற்று இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஞ்சி கையிருப்புடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் இராமநாதன்புரம் மரைக்காயப்பட்டைக்கு மன்னார் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் பாரவூர்தியில் கொண்டு வரப்பட்ட இஞ்சி இஞ்சி. மீனவ கிராமத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இஞ்சி கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மற்றைய நபர் இஞ்சியை படகில் ஏற்றுவதற்கு உதவியாக வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஒரு கிலோ இஞ்சியின் விலை 6000 ரூபாவாக அதிகரித்துள்ளதையடுத்து, மன்னார் வர்த்தகர், மீன்பிடி படகின் உதவியுடன் இந்தியாவில் இருந்து இஞ்சியை மன்னாருக்கு கொண்டு வர முயற்சித்துள்ளார்.
இந்திய மீன்பிடி படகொன்றுக்கு இலங்கைப் பணத்தில் சுமார் நான்கு இலட்சம் ரூபாவை தருவதாகப் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரையும் இராமநாதன்புரம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.