ஹிமாச்சலில் போலந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது
இமாச்சலப் பிரதேசத்தின் மெக்லியோட்கஞ்ச் என்ற இடத்தில் போலந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு நபர் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-வது பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக காங்ராவின் உதவிக் காவல் கண்காணிப்பாளர் ஹிதேஷ் லகன்பால் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அந்த பெண்ணின் மருத்துவ பரிசோதனையில் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது வாக்குமூலத்தை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் பதிவு செய்தனர்.
தியானப் பயிற்சிக்காகப் பதிவு செய்த அந்தப் பெண், கடந்த மூன்று வாரங்களாக மெக்லியோட்கஞ்சில் தங்கியிருந்தார்.
(Visited 34 times, 1 visits today)





