இஸ்ரேலுக்கு ஜி7 நாடுகளின் தலைவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

இத்தாலியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கூடும் ஜி7 நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேல்-காசா போர் குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
வரைவு அறிக்கையின் ஒரு பகுதி யில் “ரஃபாவில் நடந்து வரும் தரைப்படை நடவடிக்கைகளின் பொது மக்கள் மீதான விளைவுகள் மற்றும் குடிமக்கள் மீது மேலும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பெரிய அளவிலான இராணுவ தாக்குதலின் சாத்தியக்கூறு குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.
சர்வதேச சட்டத்தின் கீழ் அதன் கடமைப்பாடுகளுக்கு இணங்க, அதுபோன்றவொரு தாக்குதலில் இருந்து விலகி இருக்குமாறு இஸ்ரேல் அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)