இலங்கை: கடலில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி!
நீர்கொழும்பு வெல்ல வீதி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த இரண்டு மாணவர்களும் மேலும் இரு மாணவர்களுடன் இன்று (14) காலை அந்த இடத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, நீரில் மூழ்கிய இரு மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)





