இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் 111 ஆம் வகுப்புகளின் வெட்டுப்புள்ளி பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பை இலங்கை அபிவிருத்தி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதற்கான தேர்வுகள் ஜூன் 30, 2024 அன்று நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு 52,756 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 353 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் www.slida.lk என்ற இணையத்தளத்திலிருந்து தங்களின் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)





