இந்தியா

இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 01 சதவீதம் வெற்றிபெற்றுள்ளது – எடப்பாடி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2019 நடந்த தேர்தலை விட 1 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல் திமுகவிற்க்கு கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் அதிமுகவிற்க்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது எனக் கூறிய அவர்,  திமுகவில் ஸ்டாலின் ,உதயநிதி மற்றும் அமைச்சர்கள் என அதிகாரத்தை பயன்படுத்தி பலரும் வாக்கு சேகரித்தார்கள்.

அதேபோல் ராகுல் காந்தி ,திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் பிரச்சாரம் செய்தார்கள். அதேபோல் பாஜகவில் பலமுறை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார்.மேலும் அந்த கட்சியின் மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் பிரச்சாரம் செய்தனர் எனவும் கூறியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,  தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் அவர்களுக்கு வாக்கு ஒரளவிற்க்கு வந்ததது. சட்டமன்ற தேர்தலையும் ,நாடாளுமன்ற தேர்தலையும் மக்கள் பிரித்து பார்க்கிறார்கள்..

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களால் தான் ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்துள்ளது. பிரிந்து சென்றவர்களால் அதிமுகவிற்க்கு எந்த இழப்பும் கிடையாது நீதிமன்ற செல்பவர்கள் ,போரவங்க வரவங்க எல்லாம் ஒன்றினைந்து குழு ஆரம்பித்தால் அது என்ன குழுவா?

ஊடகங்கள் தான் அவர்களை பெரிதாக்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படும். 2014 ல் திமுக 3 வது இடத்திற்கு வந்தது. அப்போது இரண்டாம் இடத்தில் சிபிஆர் வந்தார். மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

1.75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 2019ல் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.அதன் பின்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலி்ல் அதிமுக வெற்றி பெற்றது. தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் திமுகவிற்கு இந்த தேர்தலில் வாக்கு கிடைத்தது. எங்ளை போல தனியாக நின்று இருந்தால் வாக்கு கிடைத்து இருக்காது.

மேற்கு மண்டலம் திமுக கோட்டை என கற்பனையாக நினைத்து கொண்டு இருக்கின்றனர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் 1.76 லட்சம் வாக்குகள் சிபிஎம் வேட்பாளர் பெற்றார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக வெற்றி பெற்றது.

சட்டமன்றத்தற்கு ஒரு மாதிரியும், நாடாளுமன்றத்திற்கு வேறு மாதிரியும் மக்கள் வாக்களிக்கின்றனர். இந்திய கூட்டணிக்கும், பா.ஜ.க கூட்டணிக்கும் போட்டி இருந்தது அதிமுக தமிழக உரிமைகளை காக்க நடுநிலையோடு இருந்தது.

பிரிந்து சென்றவர்களுக்கு பின்பே கூடுதலாக வாக்கு வாங்கி இருக்கின்றோம். கட்சி பலமாக இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content