கானா விமான நிலையத்தில் இரு பிரித்தானியர்கள் கைது!
கானாவில் இருந்து லண்டனுக்கு 6.48 மில்லியன் டொலர் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கானா தலைநகர் அக்ராவில் உள்ள கோட்டோகா சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை சுமார் 166 கிலோ எடையுள்ள கொக்கையின் போதைபொருள் கைப்பற்றப்பட்டது.சந்தேக நபர்கள் லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஏற திட்டமிடப்பட்டிருந்தனர்.
கானாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம், இந்த ஜோடி கொக்கையினை ஆறு சூட்கேஸ்களில் 72 அடுக்குகளாக வெட்டி மறைத்து வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
கமிஷன் மற்றும் இங்கிலாந்து கிரைம் ஏஜென்சி இணைந்து ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது.
ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கான குறிப்பிடத்தக்க போக்குவரத்துப் புள்ளியாக கானா உள்ளது.