உக்ரைனில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் ஒன்பது பேர் பலி : ஜெலென்ஸ்கி கடும் எச்சரிக்கை
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்
மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 29 பேர் காயமடைந்தனர்.
“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும், உக்ரைன் அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து வான் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதை ரஷ்ய பயங்கரவாதம் நிரூபிக்கிறது” என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தாக்குதலுக்குப் பிறகு எச்சரித்துள்ளார்.
இடிபாடுகளில் உயிர்தப்பியவர்களைத் தேடும் மீட்புப் பணி காணொளி காட்சிகளை அவர் பதிவிட்டதுடன், ரஷ்ய வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளின் விநியோகங்களை அதிகரிக்குமாறு உக்ரேனின் கூட்டாளிகளுக்கு அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மக்கள், எங்கள் நகரங்கள் மற்றும் எங்கள் நிலைகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க முடியும். முடிந்தவரை எங்களுக்கு அவை தேவை” என்று ஸெலென்ஸ்கி கூறினார்.