ஐரோப்பாவில் 4000 ஆண்டுகள் முந்தைய சமய கட்டடம் கண்டுப்பிடிப்பு!
ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றில் புதிய விமான நிலையத்தை நிறுவுவதற்கான பூமியை அகற்றும் பணியானது தொல்பொருள் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது.
ஒரு பெரிய கார் சக்கரத்தை ஒத்த, சுமார் 48 மீட்டர் விட்டம் கொண்ட கட்டிடத்தின் இடிபாடுகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் காஸ்டெல்லி நகரின் வடமேற்கே உள்ள பபூரா மலையின் உச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை மீட்டர் உயரத்திற்கு மேல் எட்டு படிகள் கொண்ட கல் சுவர்களால் வளையப்பட்டு, உள் அமைப்பு சிறிய, ஒன்றோடொன்று இணைக்கும் இடங்களாகப் பிரிக்கப்பட்டு, மேலோட்டமான கூம்பு கூரையைக் கொண்ட ஒரு சமய நிகழ்வுகளை நடத்தும் கட்டடமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆடம்பரமான அரண்மனைகள், கலை மற்றும் எழுத்து முறைக்கு பிரபலமான கிரீட்டின் வெண்கல வயது மினோவான் நாகரிகத்தின் “தனித்துவமான மற்றும் மிகவும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு இது என கிரேக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.