ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை – சீனா மீது ஐரோப்பிய நாடு குற்றச்சாட்டு
சீனா மீது நெதர்லாந்து குற்றம் சாட்டியுள்ளது.
கிழக்கு சீனக் கடலுக்கு மேல் வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் அருகே சீனா விமானப்படை ஜெட் விமானங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஹெலிகாப்டருக்கு அருகாமையில் ஜெட் விமானங்கள் பறந்ததாகக் கூறும் நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சகம், சீனாவின் இந்த நடவடிக்கை தனது ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியதாக மேலும் கூறுகிறது.
வடகொரியாவிற்கு எதிரான கடல்சார் தடைகளை அமல்படுத்துவதை மேற்பார்வையிடும் பன்னாட்டு ஐக்கிய நாடுகள் கூட்டணிக்கு ஆதரவாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டரை இரண்டு சீன போர் விமானங்கள் இடைமறித்ததாகவும் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களை நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சகமும் தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளது.
சர்வதேச வான்பரப்பில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.