இலங்கையில் பேருந்தொன்றின் மீது கல்வீசி தாக்குதல்: பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆனமடுவ – ஆடிகம பகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனமடுவையில் இருந்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த பேருந்தொன்றின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி ஒருவரும் உதவியாளர் ஒருவரும் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)